குருநாகல் புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நகர மேயர் துஷார சஞ்சீச விதாரண உட்பட ஐவரை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு எதிராக இடைக்காy தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான மனு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் முன்னிலையில் இந்த மனுவிசாரணைக்கு வந்தது.
இதன்போது, குறித்த மனு தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிவரை சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.