ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய “ஆமி கமல்” என்று அழைக்கப்படும் நபர் உள்ளிட்ட மூவர் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து இராணுவ சீருடையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலிப்பென்ன ஹேன்பிட்ட பகுதியில் வைத்து அவர்கள் இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிப்பென்ன பொலிஸ் நிலையத்தின் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.