இலங்கை

சிற்றுண்டிச்சாலை அதிகாரிக்கு விளக்கமறியல்

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்றின் சிற்றுண்டிச்சாலை அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, இன்று (04) உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தின் பழ விநியோகத்தரிடம் குறித்த அதிகாரி இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற விநியோக பிரிவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி பொது செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் இலஞ்சம் மற்றும் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் கடுவலை யில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும்.

farookshareek

கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் ஒருவர் சடலமாக மீட்பு.

farookshareek

மின்சார நெருக்கடிக்குக் காரணம்..

farookshareek

Leave a Comment