இலங்கை

சடலத்தை கொண்டுவர ஏற்பாடு

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) மிகப்பெரிய நகரான டுபாயிலுள்ள உணவகமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில், அங்கு பணியாற்றிய மாத்தறையைச் சேர்ந்த சமித் ரங்கன என்பவர் உயிரிழந்துள்ளாரென  நேற்று (02) அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய சடலத்தை கொண்டுவருவதற்கான முன்னெடுப்புக்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கட்கிழமை (31) இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் மூவர் கொல்லப்பட்டனர். அத்துடன் இன்னும் சிலர் காயமடைந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இடம்பெற்ற காஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் மரணமடைந்தார்.

டுபாயில் ரஷீத் பின் சயீத் வீதியிலுள்ள கே.எஃப்.சி உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்பில், கே.எஃப்.சி, ஹார்டீஸ் உணவகங்கள், பிற சில்லறை விற்பனை நிலையங்களும் சேதமடைந்தனவென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் தொடர்பில் முறையிடுமாறு அறிவிப்பு

farookshareek

முடக்கப்பட்ட மூன்று கிராமங்கள் விடுவிப்பு

farookshareek

இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டது

farookshareek

Leave a Comment