இலங்கை

கட்டாரிலிருந்து ஒரே விமானத்தில் வந்த பலருக்கு கொரோனா

கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்பட்டி​ருந்த 22 பேருக்கு, நேற்று (31) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இவ்வாறு உறுதி செய்யப்பட்டவர்களும் கட்டாரிலிருந்து வருகைத் தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் கட்டாரிலிருந்து 398 பேர் ஒ​ரே விமானத்தில் இலங்கையை வந்தடைந்ததாகவும் இவ்வாறு வந்த 54 பேருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2,868 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளதுடன், 191பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இரு கொத்தணிகளில் 16,000 தொற்றாளர்கள்

farookshareek

பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

farookshareek

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அறிவுரை

farookshareek

Leave a Comment