இலங்கை

மஞ்சள் தொடர்பில் 113 பேருக்கு எதிராக வழக்கு

Editorial   / 2020 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:01 – 0      – 36FacebookTwitterWhatsApp

மஞ்சள் தொடர்பில் நாடுபூராகவும் சுற்றிவளைப்புகளை முன்னெடுக்க நுகர்வோர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் மஞ்சள் 750 ரூபாய்க்கு விற்பது தொடர்பில் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதனை மீறி, மஞ்சளை அதிக விலைக்கு விற்ற 113 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையினர் உதவி பணிப்பாளர் பிரியந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் கலாவதியான மஞ்சளை விற்பனை செய்தவர்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மஞ்சளில் கலப்படம் செய்கின்றமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய, 42 மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் இவை பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், இதில்,  23 மாதிரிகளின் அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் 13 மாதிரிகளில் மஞ்சளுடன் சில பொருள்கள் கலக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

87ஆயிரத்தை தாண்டிய PCR பரிசோதனை

farookshareek

ஹெரோய்ன் போதைப்பொருளுடன் 09 பேர் கைது

farookshareek

நாளை முதல் மீண்டும் 5000 ரூபாய் கொடுப்பனவு – அரசாங்கம்

farookshareek

Leave a Comment