இலங்கை

மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

தரம் 6 முதல் தரம் 13 வரையிலான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் திறக்கப்படவுள்ளன.

காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் என,  கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கப்பில பெரேரா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 5 ஆம் தரம் வரையான அனைத்து அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பாடசாலைகள் மூடப்பட்டதுடன், பின்னர் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டது.

Related posts

மொரட்டுவ மேயர் சரண்

farookshareek

ஜூன் 14 வரை பயணக் கட்டுப்பாடு நீடிப்பு செய்தி: இராணுவத் தளபதி விளக்கம்

farookshareek

குணமடைந்தவர் எண்ணிக்கை உயர்வு

farookshareek

Leave a Comment