கொரோனா தொற்று காரணமாக, மறு அறிவித்தல் வரை, நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் பார்வையாளர் பகுதியை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென்றும் , மீண்டும் அதனை திறக்கும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என்றும் நாடாளுமன்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.