உலகம்

D614G வைரஸ் குறித்து வெளியாகியுள்ள தகவல் : இது எவ்வளவு ஆபத்தானது?

ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவில் காணப்படும் மரபுனு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் அதிகம் பரவுமே தவிர அதனால் அதிக ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் பால் தம்பியா இதனை தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு என கருப்படும் D614G வகை பிரல்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

கொரோனா வைரஸ் பிறழ்வு 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்றாலும் அது கொடிய வைரஸ் இல்லை என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. வைரஸ் பாதிப்பை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், கொரோனா வைரஸில் இருந்து வெளியாகும் புதிய மரபுப் பிறழ்வு (D614G)ஆராய்ச்சியாளர்களையும் மருத்துவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த பிறழ்வு தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள சிங்கப்பூரில் தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த மருத்துவரும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச தொற்று நோய்களின் சங்கத்தின் தலைவருமான பால் தம்பியா கருத்து தெரிவிக்கையில், இந்த D614G பிறழ்வு சிங்கப்பூரிலும் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா பிறழ்வு அதிகரித்தாலும் இறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த கொரோனா வைரஸ் பிறழ்வு ஒரு தடுப்பூசியின் செயல்திறனை பாதிக்காது . பிறழ்வு வைரஸைக் கொண்டிருப்பது ஒரு நல்ல விஷயம், இது மிகவும் வேகமாக பரவுக்கூடியது. ஆனால் அதிக ஆபத்தானது இல்லை. பெரும்பாலான வைரஸ்கள் பிறழ்வதால் அவை குறைந்த வைரஸாக மாறும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ஒரு மில்லியன் டொலர் ஓவியத்தை பாழாக்கிய பாதுகாவலருக்கு ஏற்பட்டுள்ள நிலை

farookshareek

10 ஆண்டு வருமான வரி செலுத்தாத ட்ரம்ப்?

farookshareek

6 கோடி பேருக்கு கொரோனா – புரட்டி எடுக்கும் கொரோனா!

farookshareek

Leave a Comment