வணிகம்

இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டன

இறக்குமதி செய்யப்பட்ட மஞ்சள் அடங்கிய 62 கொள்கலன்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 03 மாத காலப்பகுதியில் குறித்த கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

மஞ்சள் தொகையை மீள விற்பனை செய்வதற்கான அனுமதியை நிதியமைச்சு வழங்கியுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மஞ்சளை இறக்குமதி செய்த நிறுவனங்களிடமிருந்து அபராதத் தொகையை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

செலான் வங்கியின் முதலாவது ‘ஒன்லைன்’ வருடாந்த பொதுக் கூட்டம்

farookshareek

கடனட்டைகளுக்கான வட்டி 18 வீதமாக குறைப்பு

farookshareek

பெரிய வெங்காயத்தின் இறக்குமதி வரி அதிகரிப்பு

farookshareek

Leave a Comment