இலங்கை

வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிப்பு

நாளை (21) வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டி உப மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறின் பின்னர் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் தடைப்பட்டன.

இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் இரண்டு மணித்தியாலங்களும் 45 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த நேற்று முன்தினம் (18) தீர்மானிக்கப்பட்டது.

மேலும், சனிக்கிழமை ஒரு மணித்தியாலம் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நாளை வௌ்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் தலைவர் இன்று அறிவித்துள்ளார்.

Related posts

கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய முதலை.

farookshareek

வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு: இளைஞன் பலி (படங்கள் இணைப்பு)

farookshareek

மேலும் 131 பேர் பூரணமாக குணம்

farookshareek

Leave a Comment