வணிகம்

கடனட்டைகளுக்கான வட்டி 18 வீதமாக குறைப்பு

கடனட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

இதேவேளை, தங்கக்கடன் அடகு வட்டி 10 வீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று (19) கூடிய போது தற்போதைய கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது.

சட்டரீதியான இருப்பு வீதம் 2 வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

செலான் வங்கி தங்கக்கடன் சேவை விரிவாக்கம்

farookshareek

SINGER புதிய இணையத்தளம் அறிமுகம்

farookshareek

டயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’

farookshareek

Leave a Comment