இலங்கை

பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது

தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபாயை  இலஞ்சமாக வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா கைப்பற்றப்பட்ட சம்பவத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காதிருக்க, இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணை பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்தார்.

தமது சகோதரரை குறித்த வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக குறித்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு இலஞ்சம் வழங்க முயற்சித்துள்ளார்.

Related posts

சொகுசு பஸ் குடைசாய்ந்து விபத்து: ஐவர் வைத்தியசாலையில்

farookshareek

கத்திக்குத்துக்கு இலக்காகி மாணவி பலி

farookshareek

ஜூன் 14 வரை பயணக் கட்டுப்பாடு நீடிப்பு செய்தி: இராணுவத் தளபதி விளக்கம்

farookshareek

Leave a Comment