உலகம்

2012இல் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று : மூடி மறைத்த சீனா : தற்போது 10 மடங்காக பரவும் ஆபத்து : அதிர்ச்சி ஆய்வு!!

கொரோனா பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சமீப காலமாக உலகை அ ச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் ஒரு சுரங்கத் தொழிலாளர்களிடம் இருந்து முதன் முறையாக கண்டறியப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டில் சீனாவின் ஜுனான் மாகாணத்தில் உள்ள மோஜியாங் சுரங்கத்தில் பணிபுரிந்த 6 பேர் வெளவ்வால்களின் கழிவுகளை அகற்றும் வேலையை முடித்த பின்னர் நிமோனியா போன்ற நோயால் பா திக்கப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் காய்ச்சல், வறட்டு இருமல் மற்றும் கொரோனா தொடர்புடைய பிற அறிகுறிகளுடன் பின்னர் இ றந்தனர். அது மட்டுமின்றி தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதேபோல் சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது ஆய்வு மேற்கொண்ட இரு நிபுணர்கள், அது கொரோனா நோய்த்தொற்றின் முதல் நிகழ்வாக இருந்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி கொரோனா பரவல் தொடர்பில் அதன் தோற்றம் பற்றி எங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய அதில் உள்ள சான்றுகள் வழிவகுத்தன என குறிப்பிட்டுள்ளனர்.

2012-ல் நோய்த் தொற்றால் இ றந்த சுரங்கத் தொழிலாளர்களின் மாதிரிகளை தற்போது ஆய்வுக்கு உட்படுத்தியதில் கொரோனா பெருந்தொற்று போன்ற ஒற்றுமை இருப்பதை நிபுணர்கள் குழு கண்டறிந்துள்ளது. இந் நிலையில், தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பத்து மடங்கு அதிக தொற்றும் தன்மை உடையதாக மாறியிருப்பதாக மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரசின் மரபணு மாற்றத்தால் உருவாகியுள்ள இந்த வைரசுக்கு D614D என்று பெயரிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் 45 பேர் அடங்கிய குழு ஒன்றிடம் நடத்தப்பட்ட கொரோனா சோ தனையில் 3 பேரிடம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து மலேசியா திரும்பி 14 நாட்கள் தனிமை படுத்துதல் விதியை மீறி வெளியில் நடமாடிய உணவக உரிமையாளர் ஒருவரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதால் இப்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது சோ தனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என மருத்துவ ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா கடந்த வருட இறுதியில் ஆரம்பித்தது என எல்லோராலும் தெரிவிக்கப்பட்ட போதிலும் ஆரம்பித்தது எங்கே எப்போது என்ற மர்மம் இன்னுமும் நீடித்த வண்ணமே உள்ளது. இந்நிலையிலேயே இது 2012ம் ஆண்டு ஆரம்பித்திருக்கலாம் என விஞ்ஞானிகள் அ ச்சம் கொண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா வைரஸால் ப லியானோர் எண்ணிக்கை 7.73 லட்சத்தைக் தாண்டி உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.18-கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸால் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.46-கோடியைத் தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சீனாவையும், அமெரிக்காவையும் ஆட்டிப்படைக்கும் புதிய வைரஸ்!

farookshareek

20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

farookshareek

கொரோனா வைரஸால் 425 பேர் பலி

farookshareek

Leave a Comment