உலகம்

20 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னில் கொரோனா பரிசோதனையை 20 நிமிடத்தில் 100 சதவீதம் துல்லியமாகக் கணக்கிடும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெல்பர்ன் பல்கலைக்கழக பேராசிரியர் டிம் ஸ்டீனியர் (Tim Stinear) வெளியிட்டுள்ள செய்தியில்,

N1-STOP-LAMP எனப்படும் இந்த சோதனை, SARS-CoV-2 மாதிரிகளைக் பரிசோதனை செய்வதில் 100 சதவீதம் துல்லியமாக உள்ளது. இந்த இயந்திரம் சிறிய சிறிய பாகங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. கொரோனா தொற்றைக் கண்டறிவதில் விரைவாகவும், துல்லியமாகவும் செயற்படுகிறது.

முன்பே பரிசோதித்த 151 மாதிரிகளை இந்த இயந்திரம் மூலம் மறுபரிசோதனைக்கு உட்படுத்தினோம். இதில், 87 மாதிரிகளை நேர்மறையென 100 சதவீதம் சரியாக அடையாளம் கண்டுள்ளது.

இச்சோதனையில். 93 மாதிரிகளை 14 நிமிடங்களிலும், மீதமுள்ள மாதிரிகளை 20 நிமிடங்களுக்கு குறைவாகவும் முடிவுகளைத் தெரிவித்தது.

இந்த இயந்திரம் பராமரிப்பிற்கு மிகவும் எளிதாகவும், முடிவுகளை தெரிவிப்பதில் விரைவாகவும் உள்ளது. மேலும், பரிசோதனைக்கான செலவு மிகவும் குறைவாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளியேறத் தயாராகிறாரா டிரம்ப்?

farookshareek

கொரோனா தொடர்பில் WHO விடுத்த அதிர்ச்சி அறிவிப்பு!

farookshareek

ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்!

farookshareek

Leave a Comment