செலான் வங்கி பி.எல்.சி, தனது 33 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தை அண்மையில் ஒன்லைனில் ஏற்பாடு செய்தது. 2020 மார்ச் 30 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுக் கூட்டம், நாட்டில் நிலவிய நிலைமை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக சுகாதாரத் தரப்பினர் வகுத்துள்ள விதிமுறைகளைக் கடைபிடிக்கும் அதே வேளையில், அனைத்துப் பங்குதாரர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நிகழ்வை ஒன்லைனில் ஏற்பாடு செய்திருந்தது.
எதிர்காலத்தை முன்னோக்கி டிஜிட்டல் முறையில் தங்களை மாற்றிக் கொள்வதில் செலான் வங்கி முன்னணியில் உள்ளது. வீடியோ தகவல்தொடர்புப் பயன்பாட்டின் மூலம் எந்தவொரு தடங்கலும் இல்லாமல் வங்கியின் தலைமை அலுவலகத்திலிருந்து பொதுக் கூட்டத்தை, பங்குதாரர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பியிருந்தது. ஒன்லைனில் வெற்றிகரமாக அனைத்துப் பங்குதாரர்களையும் தொடர்புகொள்வதற்கும் வாக்கெடுப்பில் பங்கேற்பதற்கும் இடமளித்தது.