இலங்கை

கடமை நேரத்தில் அரச ஊழியர் கட்சி வேலையென முறைப்பாடு

தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் அக்கரைப்பற்று திட்டக் காரியாலயத்தில் பணி புரிகின்ற ஒருவர், காலையில் கடமைக்குச் சென்று ஒப்பமிட்டு விட்டு, அவர் ஆதரவு அளிக்கின்ற கட்சியொன்றின் பணிக்காகச் செல்கிறார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளருக்குக் கிடைத்த இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து உடனடியாக அங்கு விரைந்த தேர்தல் ஆணைக்குழுவினர், காரியாலயத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, அவர் காரியாலயத்தில் இல்லையெனத் தெரிய வந்துள்ளதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கா, தேர்தல் ஆணைக்குழு உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துள்ளனர்.

Related posts

மஞ்சள் திருடிய 8 பேர் கைது

farookshareek

கடன் பெற்றவர்களுக்கு சந்தோஷமான செய்தி

farookshareek

எரிபொருள் தட்டுப்பாடு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு

farookshareek

Leave a Comment