இந்தியா

அமிதாப், அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா

பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்,77 அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், பொலிவுட் நட்சத்திரங்கள், மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அமிதாப் ரசிகர்கள் அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக அமிதாப் டுவிட்டரில் பதிவேற்றியிருப்பதாவது: ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. குடும்ப உறுப்பினர்கள், ஊழியர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். 

கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்,’என தெரிவித்துள்ளார்.

Related posts

24 மணி நேரத்தில் உருவாகிறது நிவர் புயல்…

farookshareek

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கு – பிஷப் விடுவிப்பு!

farookshareek

உதயநிதி ஸ்டாலின் கைது

farookshareek

Leave a Comment