இலங்கை

விபத்தில் மாணவன் பலி

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் உயர்தர தொழில்நுட்பப் பிரிவு உயர்தர வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார்.

நேற்றிரவு (05) இடம்பெற்ற இந்த விபத்தில், ஏறாவூர் கலைமகள் வித்தியாலய வீதியை  அண்டி வசிக்கும் ஹமர்தீன் மொஹொமட் றுசைத் (வயது 17) என்ற மாணவனே, ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

மாணவன், மோட்டார் சைக்கிளில் கொழும்பு –மட்டக்களப்பு நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, வாகனமொன்றால் மோதுண்டதில் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக் குறித்த மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மின் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று நிறுத்தம்

farookshareek

நீதிமன்றம் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பெற்றோர்

farookshareek

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை பணம் – பெண்கள் உட்பட பலர் கைது

farookshareek

Leave a Comment