புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) புத்தளம்- ஆனமடுவ நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஜனாதிபதிக்கு ஆனமடுவ மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர்.
மக்களுடனான சந்திப்பின்போது, ஆனமடுவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி நேரடியாக கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்ணான்டோ, சனத் நிஷந்த உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.