இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ், பாணந்துறை நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு தனிப்பட்ட பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை- ஹெரென்துடுவ பகுதியில் நேற்று (05) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டார்.