தபால் மூல வாக்களிப்பானது, அடுத்த மாதம் 13,14, 15, 16,17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தெரிவித்த, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, 14, 15ஆம் திகதிகளில் சாதாரண அலுவலக பணியாளர்கள்,16, 17ஆம் திகதிகளில் கச்சேரிகளில், பொலிஸ், பாதுகாப்பு தரப்பினருக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், 13ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதென்றார்.
ஏனைய இடங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, தேர்தல் நடத்தப்படுகிறதா என்பதை அவதானிக்கும் பணிகள் சுகாதார தரப்பினருக்குக் காணப்படுவதால், அவர்களுக்காக 13ஆம் திகதி ஒதுக்கப்பட்டுள்ளதென்றார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.