இலங்கை

’கொரோனாவுக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாம்’

கவனயீனமாக செயற்பட்டால் இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கக்கூடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

“உலகின் அனைத்து நாடுகளும் நோய் தொற்றினால் அவதியுறும் நிலையில், எமது நாடு நம் அனைவரினதும் ஒன்றிணைந்த முயற்சியினால் குறிப்பிடத்தக்க வகையில் இந்தப் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளது.

இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் தொற்றானது முற்றாக இல்லாதொழிக்கப்படவேண்டும். கவனயீனமான செயற்பாடுகள் நோய்த்தொற்றை மீண்டும் பரப்பக் கூடும். 

எனவே, சுகாதார துறை மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்றாக பின்பற்றுமாறு அனைத்து இலங்கையர்களையும் நான் வேண்டிக்கொள்கின்றேன்” என ஜனாதிபதி தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

Related posts

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு

farookshareek

மேலும் பலர் உயிரிழப்பு

farookshareek

கல்முனை பொலிஸ் நிலையத்தில் புதிய ஆண்டிற்கான பரிசோதனை

farookshareek

Leave a Comment