கொழும்பின் சில பகுதிகளில் இன்று முதல் பஸ் முந்துரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பொரளை, புஞ்சி பொரளை, மருதானை, டெக்னிக்கல் சந்தி மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் பஸ் முந்துரிமை வீதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 9 மணிவரையான காலப்பகுதியில் பஸ் முந்துரிமை வீதி அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவையில் இருந்து புறக்கோட்டை வரையில் கடந்த 8 ஆம் திகதி முதல் பஸ் முன்னுரிமை வீதி ஒழுங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.