இலங்கை

முதலாவது நாடாளுமன்ற அமர்வு எப்போது? இவ்வாரம் தீர்மானம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைப்பதற்கான சம்பிரதாயபூர்வ அமர்வை நடத்துவதற்கான நாள், வார இறுதிக்குள் குறிக்கப்படுமென, அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல், ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது. எனினும், முதலாவது அமர்வு தொடர்பிலான எவ்விதமான அறிவித்தல்களும் வெளியாகவில்லை.

புதிதாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கிருந்த முதலாவது சந்தர்ப்பத்திலேயே, மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிய அமர்வு ஆரம்பிக்கப்படும் நாளையும் குறித்து அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா வைரஸ் வியாபித்ததால், தேர்தலை நடத்துவதற்கான ஏற்ற தருணம் இதுவல்லவென அறிவித்திருந்த தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தலுக்கான திகதியை ஒத்திவைத்ததோடு, ஓகஸ்ட் 5 என, தேர்தலுக்கான திகதியையும் குறித்தார்.

இதனிடையே, ஜனாதிபதிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர், ஆணைக்குழுவின் அங்கத்தவர்களுக்கும் இடையில், இன்று புதன்கிழமை, ஜனாதிபதி செயலகத்தில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

ராகலை விபத்தில் சிறுமி உயிரிழப்பு

farookshareek

பள்ளத்தில் வீழ்ந்த கெப் – இருவர் பலி

farookshareek

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

farookshareek

Leave a Comment