மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 902 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (14) காலை 6.00 மணி தொடக்கம் குறித்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெக்கப்பட்டுள்ளது.
இதன்போது, போதைப்பொருள் வைத்திருந்த 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 229 நபர்கள், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 286 நபர்கள் உள்ளிட்டவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதி்மன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.