புதிய கூட்டணியை சீரிய முறையில் முன்னெடுத்துச் செல்லவேண்டிய பணி மக்கள் அனைவரையும் சாரும். குறிப்பாக இளையோர்கள் கைகளில் இது தங்கியுள்ளதென, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு, யாழ்ப்பணத்தில் உள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்துரைத்த அவர், வெறுமனே தேர்தலை வெற்றிகொள்ளும் நோக்கத்துடன் இந்த கூட்டணியை தான் அமைக்கவில்லையெனவும் பதவியும் சலுகைகளும் முக்கியம் என்று நான் நினைத்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே ஒட்டிக்கொண்டிருந்திருப்பேனெனவும் கூறினார்.
பதவிகளும் சலுகைகளும் தனது நோக்கமல்லவெனவும், அவர் 4றினார்.