வெளிநாட்டு சிகரெட் வகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குவைத் நாட்டிலிருந்து வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், அவர் குருநாகல் பகுதியை சேர்ந்த 43 வயதுடைய வியாபாரியெனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருடைய பையிலிருந்து 35,240 சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 62 இலட்சம் ரூபாயெனவும் தெரிவிக்கப்படுகிறது.