இலங்கை

தொல்லியல் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரவேண்டும்

தொல்பொருள் ஆய்வுத் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீ​ழ் கொண்டு வருவது அவசியமென இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

வடக்கு , கிழக்கிலுள்ள தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு இதுவே சிறந்த வழியெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

பலபிட்டிய பகுதயில் நடைப்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், 

தொல்லியல் பாதுகாப்பு செயற்பாடுகளை உயர் ஒழுக்க விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்க வேண்டியது அவசியமெனவும்,  அதனால் அவற்றின் மீது முழுமையாக அதிகாரத்தை செலுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் வடக்கு கிழ​க்கு பகுதிகளிலுள்ள தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பதே கடிமாக உள்ளதென தெரிவித்துள்ள அவர், வடக்கு, கிழக்கிலேயே அதிகளவான தொல்லியல் சின்னங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

வடக்கு கிழக்கில், இனமத மோதல்கள் ஏற்படும் பட்சத்தில் தொல்லியல் சின்னங்கள் சிதைவடையலாம் எனத் தெரிவித்துள்ள அவர்,  அவற்றை பாதுகாத்தால் மாத்திரமே எதிர்கால சந்ததிக்கு வரலாறு தொடர்பாக தெரிவை வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.

Related posts

IMF பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு

farookshareek

கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

farookshareek

மேலும் 26 பேர் குணமடைந்தனர்

farookshareek

Leave a Comment