இலங்கை

பட்டதாரிகளை இணைத்தல்; ‘மார்ச் 1 முதல் இடம்பெறும்’

அரச சேவைகளில், பயிற்சியாளர்களாகப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அங்கிகாரமளிக்கப்பட்டு உள்ளதெனத் தெரிவித்த அவர், அவ்வாறனவர்களுக்கு ஒரு வருடகாலம் பயிற்சியும் தலைமைத்துவ பயிற்சியும் வழங்கப்படும் என்றும் சேவைக்கு இணைத்துக்குக் கொள்ளப்பட்டதன் பின்னர், ஐந்து வருடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், 2012ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 50,000 இளைஞர் – யுவதிகளை, அரச சேவையில் ஈர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கல்வி அமைச்சு

நீர்ப்பாசன திணைக்களம் (கிராமிய நீர்ப்பாசன பராமரிப்பு)

விவசாய அபிவிருத்தி திணைக்களம் (கிராம விவசாய அபிவிருத்தி)n வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் (வன ஜீவராசிகள் மற்றும் அணுகுமுறை திட்டம்)
 

ஆயுர்வேத திணைக்களம் (பிரதேச ஆயுர்வேத வைத்தியசாலைகள்)n சுகாதார மற்றும் சுதேசிய வைத்திய சேவை அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் ஃ டிஸ்பென்சரி)

நில அளவை திணைக்களம்

விவசாய திணைக்களம் (விவசாய சேவை மற்றும் தொழில் நுட்ப சேவை)

ஏற்றுமதி விவசாய திணைக்களம் (சிறு ஏற்றுமதி பயிர் திட்டம்)

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் (கால்நடை பண்ணை அபிவிருத்தி)

மதிப்பீட்டு திணைக்களம்

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகியனவாகும்

Related posts

மேலும் 18 பேர் குணமடைந்தனர்

farookshareek

சுதந்திர கிண்ண வெற்றி டக்சன் பியூஸ்லஸுக்கு அர்ப்பணிப்பு

farookshareek

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.

farookshareek

Leave a Comment