நாடாளுமன்றம் இன்று (05) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ள நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிறப்புரை ஆற்றுவற்கான சந்தர்ப்பம் உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்றைய தினம் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காணப்படுகின்றது.
மாதாந்தம் முதலாவது புதன்கிழமைகளில், பிரதமரிடம் கேள்விகளை எழுப்பும் நடைமுறை கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில், இன்று எதிர்க்கட்சி தரப்பில் 3 கேள்விகளும் ஆளும்தரப்பு சார்பில் கேள்வியொன்றும் பிரதமரிடம் முன்வைக்கப்படவுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளன.