இலங்கை மின்சார சபையினால் இன்று (03) முதல் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என, சபையின் உயர்மட்ட அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் பல்வேறு கட்டங்களாக இந்த இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்காத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, நீர் மின்னுற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு மின்சாரத்தை வழங்க அனல்மின்னுற்பத்தியே பயன்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள அட்டவணை
A – 8.30-10.30
B – 10.45-12.45
C – 12.45-14.45
D – 14.45- 16.45